புக்கிங் ஆகவில்லையா..? 'பொன்னியின் செல்வன் 2'-வுக்கு வந்த பெரும் சோதனை.! அதிர்ச்சியில் படக்குழு.!

பொன்னியின் செல்வன் 2  படத்தின் புக்கிங் தமிழகத்தில், வேகமாக நடைபெற்று வரும் நிலையில், USA-வில் பெரிய அளவில் புக்கிங் ஆகவில்லை என தகவல் வெளியானது.

பொன்னியின் செல்வன் 2  படத்தின் புக்கிங் தமிழகத்தில், வேகமாக நடைபெற்று வரும் நிலையில், USA-வில் பெரிய அளவில் புக்கிங் ஆகவில்லை என தகவல் வெளியானது.

பொன்னியின் செல்வன் 2

unknown node

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி,  த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா,  உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

படத்தின் ப்ரோமோஷன் தீவிரம்

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படக்குழுவும் பல இடங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்தை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள்.

unknown node

குறிப்பாக இன்று கூட படக்குழு பெங்களூர்வுக்கு சென்றுள்ளனர். அதற்கான புகைப்படங்களும் கூட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

படத்திற்கு வந்த சோதனை

இந்த படம் ஏப். 28-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில். இதற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நேற்று ஆன்லைனில் தொடங்கியது. தமிழகத்தில், இதற்கான புக்கிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், USA-வில் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் புக்கிங் ஆகவில்லை என தகவல் வெளியானது.

unknown node

எனவே, இதனால், படக்குழு ஏமாற்றத்தில் உள்ளதாம். படத்திற்கு இவ்வளவு புரமோஷன் செய்தும், USA வில் புக்கிங் ஆகவில்லை என்பது இந்த ஏமாற்றத்திற்கு காரணம். இன்னும் சில நாட்களில் USA வில்  அதிகமாக புக்கிங் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.