AK62 படத்திற்கு அனிருத் இசை இல்லையா..? வெளியான ஷாக்கிங் தகவல்.!

அஜித் நடிக்கவுள்ள AK62 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக வேறொரு இசையமைப்பாளர் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள்

அஜித் நடிக்கவுள்ள AK62 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக வேறொரு இசையமைப்பாளர் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

AK62

unknown node

AK62 Movie [Image Source: Twitter ]

நடிகர் அஜித் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “AK62” என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

AK 62 படத்தில் திடீர் மாற்றம்

unknown node

Ajith AK62 [Image Source : Twitter]

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவிருக்கும் நிலையில், சில காரணங்களால் ak 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக பிரபல இயக்குனரான மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும் என தகவல்கள் பரவியது.

AK62 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இல்லை..?

unknown node

Arun Raj ajith

இந்த நிலையில் AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்ற காரணத்தால், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்தும் இசையமைக்கவில்லையாம். AK62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதால் அவருடன் தடம் படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்த அருண் ராஜ் AK62 படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை  முடிந்த பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் – அஜித் காம்போ

unknown node

ajith and anirudh

ஏற்கனவே அஜித் அனிருத் கூட்டணியில் வெளியான வேதாளம், விவேகம் ஆகிய படத்தின் பாடல்களும். பின்னணி இசையும் மிகப்பெரிய ஹிட் ஆனது. எனவே இந்த படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் படத்திற்கு அனிருத்  இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனிருத் ak62 படத்திற்கு இசையமைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.