இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படத்தில் நிவின் பாலி..??

Director Ram is reportedly set to star in a film directed by actor Nivin Paul next.

இயக்குனர் ராம் அடுத்ததாக நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்.

இயக்குனர் ராம் தமிழ் சினிமாவில் பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ், ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் எடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக மிகவும் வித்தியாசமான கதையா கொண்டப்படமாக இருக்கும். இந்த நிலையில் நீண்டகாலமாக படம் எடுக்காமல் இருந்த ராம் தற்போது மீண்டும் திரைப்படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். ஆம் அவர் இயக்கும் அடுத்த படத்திற்கான கதையை முதன் முதலாக நடிகர் சிம்புவிடம் கூறியதாகவும், சிம்பு ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தது.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் ராம் நடிகர் நிவின் பாலியிடம் கதையை கூறியதாகவும், அந்த கதை நிவின் பாலிக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகவுள்ளது. மேலும் கண்டிப்பாக இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைப்பது மட்டும் உறுதி. மேலும் இயக்குனர் ராமின் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படத்தில் நிவின் பாலி..??