அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த நித்யா மேனன்.! வைரலாகும் வீடியோ..!

நடிகை நித்தியா மேனன் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் சொல்லிக்கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நித்தியா மேனன் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் சொல்லிக்கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திரா மாநிலத்தின் திருப்பதி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் பகுதிக்கு சென்ற நடிகை நித்தியாமேனன் அங்கிருந்த அரசு தொடக்கப் பள்ளி ஒன்றிற்க்கு சென்றுள்ளார். அங்கு படிக்கும் மாணவர்களிடம் முதலில் பேச தொடங்கிவிட்டு அனைவரின் நலனையும் விசாரித்தார்.

பிறகு மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் சொல்லிக் கொடுத்தார். மாணவர்களுக்கு அவர் ஆங்கிலப் படம் சொல்லிக்கொடுக்கும் அந்த அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் அழகு அருமை என தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

மேலும் நடிகை நித்தியாமேனன் கடைசியாக திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அறம்திருக்கல்பனை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node