மகான் படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், நடிகர் பாபி சிம்ஹா, சனத் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
unknown nodeஇந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஇசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இந்த பாடலை வி.எம்.மகாலிங்கம் பாடிய “சூறையாட்டம் ” பாடல் நேற்று வெளியீடபட்டது. இந்நிலையில், மகான் படத்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
unknown node