பெரிய பட்ஜெட்டில் புது படம்...மீண்டும் இணையும் 'கர்ணன்' கூட்டணி.!

வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக "கேப்டன் மில்லர்" என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து

வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக “கேப்டன் மில்லர்” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு, தனுஷ் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

Captain Miller [Image Source: Twitter ]

இதற்கிடையில், தனுஷ்மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விரைவில்  ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

unknown node

karnan team [Image Source : Google ]

ஏற்கனவே இவர்களது கூட்டணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான கர்ணன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்த படம் வெற்றியடையும் போதே, நடிகர் தனுஷ் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார்.

unknown node

dhanush and mari selvaraj [Image Source : Google ]

எனவே,  இந்த ஆண்டு இறுதிக்குள் தனுஷ் + மாரி செல்வராஜ்+ கலைப்புலி தாணு ஆகியோர் கூட்டணியில் பெரிய பட்ஜெட்டில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாரி செல்வராஜ் வாழை எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய பட்ஜெட்டில் புது படம்...மீண்டும் இணையும் 'கர்ணன்' கூட்டணி.!