இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கடைசியாக பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகியோரை வைத்து “ஷெர்ஷா” எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று பல விருதுகளை குவித்தது என்றே கூறலாம்.
unknown nodeVishnuvardhan [Image Source : Twitter]
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணுவர்த்தன் அடுத்ததாக தமிழில் மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளியை வைத்து ஒரு படம் இயக்குவதாகவும், அந்த படத்தை அவருடைய உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரிப்பதாகவும் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
unknown nodeakash murali [Image Source : Twitter]
ஆனால், இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த படம் தொடங்கவில்லை. மேலும், இந்த படம் கிட்டத்தட்ட 35 கோடியில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்கவும் விஷ்ணுவர்த்தன் அட்வான்ஸ் தொகையை வாங்கிவிட்டாராம். ஆனாலும் அவர் தற்போது சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதால் அந்த படத்தின் வேளைகளில் பிசியாக இருக்கிறாரம்.
unknown nodevishnuvardhan director and Xavier Britto [Image Source : Twitter]
எனவே, சேவியர் பிரிட்டோ விஷ்ணுவர்த்தனிடம் அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுங்கள் அல்லது இந்த திரைப்படத்தை சீக்கிரம் முடித்துக்கொடுங்கள் என்று கேட்டுள்ளாராம். இதனால் என்ன செய்வது என்ற நெருக்கடியில் விஷ்ணுவர்த்தன் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.