நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் "கண்ணுங்களா செல்லங்களா" பாடல்..!

The video song 'Kannungala Cellalangala' featured in the movie 'Nengsam Marappatillai' has been released

நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் இடம்பெற்ற கண்ணுங்களா செல்லங்களா என்ற வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இந்த திரைப்படம் ரூ.2.5கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற கண்ணுங்களா செல்லங்களா என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

unknown node