ஜோடியாக சென்று தடுப்பூசி எடுத்துக் கொண்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன்...!

Actress Nayanthara, popularly known as the Lady Superstar of Tamil Cinema, and her boyfriend Vignesh Sivan have been vaccinated at a private hospital in Chennai.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலரான விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலரான விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இவர்களது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.