பிரபல நடிகர் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா காரணம் இது தான்

This news gives information about Nayantara who refused to act in the famous actor is the reason for this-pirabala nadikar padathil nadikka maruththa nayathara karanam ithu than

நடிகை நயன்தாரா நடிகர் நாகார்ஜூனாவுடன்  நடிக்க மறுத்துள்ளார்.

நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.மேலும் இவரது படங்களும்  அடுத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.

இவர் தற்போது விஜய் நடிக்கும் “தளபதி 63” படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.  இதையடுத்து தற்போது இயக்குநர் முருகதாஸ் இயக்கும் “தர்பார்” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக இருக்கிறார் இந்த லேடி சூப்பர் ஸ்டார்.

இந்நிலையில் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களிலும் பிஸியாக நடித்து வரும் நயன்தாராவிற்கு நடிகர் நாகார்ஜூனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அழைத்தாராம். உடனே நயன்தாரா தனக்கு கால்ஷீட் ஒதுக்க நேரம் இல்லாததால் அவருடன் நடிக்க மறுத்துள்ளார்.