இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ‘தளபதி 67’. விஜய் நடித்து வரும் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeThalapathy67 [Image Source : Twitter]
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் யார் யார் என்பதை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeபடத்தில் இணைவது குறித்து பேசிய மிஷ்கின் ” 21 வருடங்களுக்கு முன்பு நான் விஜய் படத்துக்கு இணை இயக்குநராகப் பணிபுரிந்தேன். இத்தனை ஆண்டுகளில் மாறாத ஒன்று, நாம் பகிர்ந்து கொள்ளும் பந்தம். லோகேஷ் மற்றும் எனக்கு இடையே உள்ள பரஸ்பர அன்பு மற்றும் மரியாதையின் காரணமாக இது என்னை மேலும் மேலும் குறிப்பாக உற்சாகப்படுத்துகிறது. தளபதி 67 உடன் உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறியுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயக்குனர் மிஷ்கின் விஜய்யுடன் யூத் படத்தில் பணிபுரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.