நடிகை சமந்தா தற்போது நடித்துள்ள ‘சகுந்தலம்’ படம் திரைப்படம் வரும் “ஏப்ரல் 14 அன்று இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழுவினருடன் நடிகை சமந்தாவும் தீவிரமாக இறங்கியுள்ளார்.
unknown nodesamantha [Image Source : Twitter]
அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு மலையாளம் மொழி பற்றியும், தனது அம்மா பற்றியும் பேசியுள்ளார். மலையாளத்தில் உள்ள ஒவ்வொரு நடிகர்களும், தனித்தன்மை வாய்ந்த நடிகர்களாக உள்ளனர்.
unknown nodesamantha [Image Source : Twitter]
எனக்கு சில நேரங்களில் ஒரே மாதிரியாக நடிக்கிறோமோ என தோன்றினால் மலையாளப் படங்களை பார்த்து புதிதாக கற்றுக்கொள்வேன்.என் அம்மா ஒரு மலையாளியாக இருந்தும் எனக்கு மலையாளம் கற்றுக்கொடுக்காமல் விட்டுவிட்டார்” என கூறியுள்ளார்.
unknown nodesamantha smile [Image Source : Twitter]
மேலும் சாகுந்தலம் படத்திற்குப் பிறகு, நடிகை சமந்தா விஜய் தேவர கொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’ என்ற காதல் திரைப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.