தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்துள்ளார்.
திருமணம் நாள் கொண்டாடும் கேப்டன் விஜயகாந்த் & பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக நிறுவன தலைவரும் பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் & பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் 33 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி தனது இல்லத்தில் குடும்பத்துடன் கொண்டாடினார்.
@iVijayakant@lksudhish@vj_1312@dmdkparty2005#weddingday@ramachandran_AA@vinishsaravana@Arun_reportpic.twitter.com/MLeti3mCFf
— Libika Palanivel (@CpLibi)January 31, 2023
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் & பிரேமலதா அவர்களின் 33- ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி இன்று தனது இல்லத்தில் குடும்பத்துடன் கொண்டாடினார். எனவே இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கேப்டன் விஜயகாந்த்தை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர்
unknown nodeஇந்த நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவருக்கு கையில் அன்புடன் முத்தம் கொடுத்துள்ளார். அதற்கான புகைப்படங்களை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு ” என் உயிரை நான் சந்தித்த போது ” என பதிவிட்டுள்ளார்.
விஜயகாந்த் – எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி
unknown nodesa chandrasekar vijakanth [Image Source : Twitter]
நடிகர் விஜயகாந்த் மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணியில் ஆரம்பகாலகட்டத்தில் வெளியான ஓம் சக்தி ,புது யுகம்,சாட்சி ,நீதி பிழைத்தது,நீதியின் மறுபக்கம்,ராஜதுரை,வெற்றி ,செந்தூரபாண்டி உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.