ஸ்பைடர்மேன் vs ஹல்க்! மிரட்டலான மோதலுடன் வெளிவந்தது 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' ட்ரெய்லர்!

ட்ரெய்லரின் ஹைலைட்டாக, ஸ்பைடர்மேனுக்கும் ஹல்க்கிற்கும் (Mark Ruffalo) இடையிலான அதிரடி மோதல் காட்சிகள் ரசிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன.

Hero Image

டெல்லி : மார்வெல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள SPIDER-MAN: BRAND NEW DAY திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் Tom Holland மீண்டும் பீட்டர் பார்க்கர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் Zendaya உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் சம்பவங்களுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கதை நடைபெறுகிறது. மல்டிவெர்ஸை காப்பாற்றுவதற்காக உலகமே தனது அடையாளத்தை மறந்துவிடும் முடிவை எடுத்த பீட்டர் பார்க்கர், தற்போது நியூயார்க் நகரில் தனிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தனது முழு நேரத்தையும் ஸ்பைடர்மேனாக மக்களை பாதுகாப்பதற்காக செலவிடுகிறார்.

புதிய ட்ரெய்லரில், பீட்டரின் சக்திகள் எதிர்பாராத விதமாக மாறத் தொடங்குவதை காண முடிகிறது. தனது திறன்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகுவதால், உடல் மற்றும் மன ரீதியாக பெரிய சவால்களை அவர் எதிர்கொள்வதாக காட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

ட்ரெய்லரின் மிகப்பெரிய ஆச்சரியமாக, ஸ்பைடர்மேன் மற்றும் Hulk இடையேயான மோதல் இடம்பெற்றுள்ளது. ஹல்க் கதாபாத்திரத்தில் மீண்டும் Mark Ruffalo நடித்துள்ளார். இந்த மோதலுக்கான காரணம் என்ன என்பது தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், MJ தனது வாழ்க்கையில் புதிய பாதையை தேர்ந்தெடுத்திருப்பது போன்ற உணர்ச்சிகரமான காட்சிகளும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், தனது பழைய உறவுகளை இழந்த பீட்டர் பார்க்கரின் தனிமை மற்றும் மனப்போராட்டம் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜேக்கப் படலோன், ஜான் பெர்ந்தால், மைக்கேல் மண்டோஉள்ளிட்டோர் மீண்டும் நடிக்கின்றனர். புதிதாக சேடி சிங்க், டிராமெல் டில்மேன் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் Spider-Man: Brand New Day திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. Spider-Man: Brand New Day படத்தின் ட்ரைலரை பார்க்க இந்த ( லிங்கை க்ளிக் ) செய்யுங்கள்.

ஸ்பைடர்மேன் vs ஹல்க்! மிரட்டலான மோதலுடன் வெளிவந்தது 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' ட்ரெய்லர்!