சென்னை :சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 10) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தணிக்கை வாரியத்தின் 25-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் U/A சான்றிதழ் பெற்று வெளியான இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் திரையரங்குகளில் தீப்பற்றி எரியும் அளவுக்கு வெற்றி பெற்றதா என்பது இப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது.
நெட்டிசன்களின் விமர்சனங்கள் பெரும்பாலும் கலவையான உள்ளன. “சிவா சூப்பர் டப்பர் ஹிட்… பராசக்தி தீ பரவிட்டது” என்று பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். கதை, நடிப்பு, இசை, திரைக்கதை ஆகியவை புகழப்பட்டு வருகின்றன. சிவகார்த்திகேயனின் நடிப்பு மற்றும் காமெடி டைமிங் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “பொங்கலுக்கு பராசக்தி தான் மசாலா” என்று பல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படத்தை பார்த்த ஒருவர் ” பராசக்தி மொழிக்காக போராடி உயிர் நீத்த நம் முன்னோர்களின் தியாகத்தையும், மொழி மீதான பற்றையும் இன்றைய தலைமுறைக்கு அழுத்தமாக பதிவு செய்திருக்கும் ஒரு பாடம் பராசக்தி. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என படத்தை பார்த்துவிட்டு கூறியுள்ளார்.
unknown nodeபடத்தை பார்த்த மற்றோருவர் ” பராசக்தி 1960களின் தமிழ் மாணவர்கள் மற்றும் அவர்களின் தாய்மொழியைப் பாதுகாக்கப் போராடிய மக்களின் உச்சபட்ச தியாகத்தை வெளிப்படுத்தும் ஒரு திரைப்படம்..உணர்ச்சிபூர்வமான.. ஈடுபாட்டுடன்.. சக்தி வாய்ந்த.. திரைப்படம்” என தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
unknown nodeபடத்தை பார்த்த மறறொருவர் ” நேர்மையான நோக்கங்களைக் கொண்ட ஒரு சலிப்பூட்டும் காலகட்டத் திரைப்படம், ஆனால் உங்கள் பொறுமையைச் சோதிக்கும் சோர்வான, நீளமான கதை சொல்லல்! படம் ஆரம்பத்தில் ஒரு நம்பகமான காலகட்டச் சித்தரிப்பால் கவனத்தை ஈர்க்கிறது. இருப்பினும், மெதுவான கதை சொல்லலும் மந்தமான காதல் காட்சியும் முதல் பாதியின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கின்றன. இடைவேளைக்குப் பிறகு, படம் முடிவில்லாமல் நீண்டு, வசதிக்கேற்ப எழுதப்பட்ட திரைக்கதை மற்றும் நீட்டிக்கப்பட்ட காட்சிகளால் பொறுமையைச் சோதிக்கிறது. மொழிப் போராட்டத்தைச் சுற்றியுள்ள உணர்வுகள் மேலோட்டமாகத் தோன்றி, பார்வையாளர்களைச் சென்றடையத் தவறுகின்றன. இயக்குநர் சுதா கொங்கரா ஒரு துணிச்சலான மற்றும் நேர்மையான கதைக் கருவைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், திரைக்கதை மற்றும் வசனங்களில் கடுமையாகத் தடுமாறுகிறார். எஸ்.கே நன்றாக நடித்துள்ளார். ஜெயம் ரவியின் கதாபாத்திரத்திற்கு முறையான பின்னணிக் கதை இல்லாததால், அதன் தாக்கம் குறைகிறது. கலை அமைப்பு ஒரு சிறப்புப் பாராட்டுக்குரியது. இசை சுமாராக உள்ளது. மொத்தத்தில், ஒரு சலிப்பூட்டும் திரைப்படம்” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node