மாஸ்டர் படத்துக்கு பிறகுதான் ... எம்ஜிஆர் மகன் ரிலீஸ்..?

It has been reported that the MGR son movie starring Sasikumar will be released only after the release of the master movie

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் மாஸ்டர் படம் வெளியான பிறகு தான் வெளியாகும் என்று தகவல்

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப்படத்தை அவரே தயாரித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ் சமுத்திரகனி ஆகிய நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் கடந்த தீபாவளி தினத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது. ஆம் மாஸ்டர் திரைப்படம் வெளியான பிறகு தான் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.