26 நாட்களில் '300 கோடி'...வசூலில் மாஸ் காட்டிய "வாரிசு".! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘வாரிசு ‘. இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘வாரிசு ‘. இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

unknown node

MegaBlockbusterVarisu

படத்தில் சரத்குமார், பிரபு, ராஷ்மிகா, ஷாம் என பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றஇந்த திரைப்படம் வெளியாகி 27-நாட்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

unknown node

VarisuPongalWinner [Image Source : Twitter ]

இதற்கிடையில், படம் 26 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதற்கான அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

unknown node

Varisu [Image Source : Twitter ]

அதன்படி, படம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 300 கோடி வசூல் செய்துள்ளது என்பது விஜயின் சினிமா கேரியரில் இரண்டாவது படம். இதற்கு முன்பு வெளியான பிகில் படமும் உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node