#MasterEnters200crclub : மாஸ்டரின் வெறித்தனமான வசூல்! கொண்டாடும் ரசிகர்கள்!

It has been reported that Tamil Nadu has collected Rs 100 crore in a week and has collected nearly Rs 200 crore globally.

தமிழகத்தில் ஒரு வாரத்திலேயே ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகவும், உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தலப்பாதை விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாட்டர். இந்த திரைப்படத்தில், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஜோடியாக நடிகை மாளவிகா மோகனும் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் சாந்தனு உட்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்தது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள்,இப்படம் குறித்து நேர்மறையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சிலர் எதிர்மறையான விமர்சனங்களையும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் வெளியாகி தமிழகத்தில் ஒரு வாரத்திலேயே ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகவும், உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைக்கு மத்தியில், மாஸ்டர் படம் இப்படிப்பட்ட சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, விஜய் ரசிகர்கள் ட்வீட்டர் பக்கத்தில், #MasterEnters200crclub என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.