உடல் எடையை குறைத்து மாஸாக மாறிய 'மாஸ்' பட நடிகை.!

The photo of actress Vithuleka losing weight and changing to heroine range is going very viral on social websites.

நடிகை வித்யூலேகா தனது உடல் எடையை குறைத்து ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழில் ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூலேகா.தமிழில் சூர்யாவின் மாஸ் உட்பட ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள மோகன் ராமின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது தனது விடா முயற்சியால் தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நடிகையாக வலம் வரும் வித்யூலேகா ஆரம்பத்தில் சற்று உடல் எடையை அதிகரித்து காணப்படுவர்.

அதற்காக பலரது கேலி, கிண்டலுக்கு ஆளானதாகவும் பேட்டியில் வித்யூலேகா கூறியிருந்தார்.இந்த நிலையில் இவர் ஊரடங்கை உபயோகித்து தனது உடல் எடையை குறைத்ததும்,அது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது 25 முதல் 30 கிலோ வரை எடை குறைத்து ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறியுள்ளார் .இதனை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர் . போலீஸ் உடையில் ஸ்லிம்மாக உள்ள வித்யூலேகாவின் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node