சீயான் விக்ரமுடன் இணையும் மாரி செல்வராஜ்.! வெளியான சூப்பர் தகவல்.!

Default Image

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Thangalaan
Thangalaan [Image Source : Google ]

இதற்கிடையில், நடிகர் விக்ரம் அடுத்ததாக பரியேறும் பெருமாள். கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே, மாரி செல்வராஜ் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளார்.

mari selvaraj vikram
mari selvaraj vikram [Image Source : Google ]

அந்த படத்தை இயக்கி முடித்த பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக விக்ரமை வைத்து படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விரைவில் விக்ரம் -மாரி செல்வராஜ் இணையும் படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ponniyin selvan 2
ponniyin selvan 2 [Image Source : Twitter]

மேலும் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல அவர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்