முதன் முறையாக தனது படத்திற்காக போனவுடன் களமிறங்கிய மணிரத்னம்.! பொன்னியின் செல்வன் புது அப்டேட்.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெய்ராம் போன்ற பல திரையுலக பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

unknown node

இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தின் இசை கோர்ப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் 12 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

unknown node

இதனையடுத்து தற்போது கிடைத்த தகவலின் படி, 12 பாடல்களில் ஒரு பாடலை இயக்குனர் மணிரத்னமே எழுதியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதுவே அவர் எழுதும் முதல் பாடல். மேலும், மணிரத்னம் படங்களுக்கு வழக்கமாக கவிஞர் வைரமுத்து தான் பாடல்களை எழுதுவார்.

unknown node

ஆனால் சில காரணங்களால் வைரமுத்து பாடல் எழுதவில்லை. அவருக்கு பதில் வேறு சிலர் பொன்னியின் செல்வன் பாடல்களை எழுதி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.