சிம்புவின் பர்த்டே ட்ரீட்டாக வருகிறது மாநாடு டீசர்.!

It has been announced that the conference image teaser will be released tomorrow at 2.34pm on the eve of Simbu's birthday.

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 2.34 மணிக்கு மாநாடு பட டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடித்துள்ள “ஈஸ்வரன்” திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுடன் படத்திலிருந்து வெளியான பர்ஸ்ட் லுக் , செக்கன்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு பட டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி சிம்புவின் பிறந்தநாளான நாளை மதியம் 2.34 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .எனவே சிம்பு ரசிகர்கள் பலர் சிம்புவின் பிறந்தநாள் ட்ரீட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

unknown node