பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் சென்னையில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் 500 கும் மேற்பட்ட பாடல்களை பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ளார். விஜய்யின் ‘ஆல் தோட்ட பூபதி‘ பாடலை எழுதியதன் மூலம் பிரபலமானஇவர் ‘தசாவதாரம்‘ படத்தில் நடித்திருப்பார்.
unknown nodeஇவருடைய மகள் தூரிகை, சில வருடங்கள் முன்புவரை முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். கடந்த 2020ம் ஆண்டு ”பீயிங் வுமன் (Being Women Magazine) என்னும் டிஜிட்டல் இதழை தொடங்கி, பெண்களுக்கான பத்திரிகையாக நடத்திவந்தார்.
இதையும் படியுங்களேன்-சந்தானத்திற்கு டாட்டா…. யோகி பாபுவுக்கு குவியும் வாய்ப்புகள்.! அடுத்து என்ன நடக்க போகிறதோ.?!
unknown nodeஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் சேரன் உள்பட திரையுலகினர் பலருக்கும் காஸ்ட்யூம் டிசைனராகவும், சில கான்சப்ட் ஷூட்களிலும் பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில், மிகவும் தைரியமான மனம் கொண்ட தூரிகை நேற்று திடீரென சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
unknown nodeஅவரது உடல் சாலி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் சரியான தகவல் வெளியாகவில்லை, இதனையடுத்து, முதல்கட்டமாக தூரிகையின் போனை பறிமுதல் செய்துள்ள அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.