பாடலாசிரியர் பீயர் பிரசாத் காலமானார்…சோகத்தில் திரையுலகம்.!

Default Image

பிரபல மலையாள பாடலாசிரியர் பீயர் பிரசாத் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 62.

மலையாள திரையுலகில் பல ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் பீயர் பிரசாத். இவர்  பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘ கிளிச்சுந்தன் மாம்பழம்’ படத்தில் வித்யாசாகர் இசையில் வெளியான 6 பாடல்கள் மற்றும் திலீப், மோகன்லால் ஆகியோரின் படங்களில் 60-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

அதைப்போல, தமிழில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ திரைப்படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில், 62 வயதான பீயர் பிரசாத் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது திடீர் மறைவு மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும், பீயர் பிரசாதிற்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்