இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருந்த திரைப்படம் “கொரோனா குமார்”. இந்த திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ் இசையமைத்திருந்தார். படத்தில் இருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியானது.
unknown nodeCorona Kumar [Image Source : Twitter]
மேலும் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால், பிறகு தனிப்பட்ட சில காரணங்களால் படத்தில் இருந்து சிம்பு விலகியதாகவும், படத்தில் சிம்புவுக்கு பதில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
unknown nodeCorona Kumar pradeep [Image Source : Twitter]
அதன்படி, தற்போது மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாம். படத்தில் சிம்புவுக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் அவர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
unknown nodeCorona Kumar pradeep [Image Source : Twitter]
ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எனவே இந்த வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக கொரோனா குமார் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.