நடிகை சமந்தா தற்போது இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சரித்திர கதையம்சம் கொண்ட “சாகுந்தலம்” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeShaakuntalamTrailer Out Now [Image Source : Youtube]
இதனை முன்னிட்டு படத்திற்கான டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. அதற்கு விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு நடிகை சமந்தா, இயக்குனர் குணசேகர் , தேவ் மோகன், அதிதி பாலன், அல்லு அர்ஹா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய இயக்குனர் குணசேகர் ” இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என கூறினார்.
unknown nodeஇதனால் சற்று எமோஷனலான சமந்தா மேடையில் கண்ணீர் விட்டு ஆலா தொடங்கினார். பிறகு கையில் வைத்திருந்த பேப்பர் கைக்குட்டையை வைத்து கண்ணை துடைத்துக்கொண்டார். மேலும் விழாவில் பேசிய சமந்தா ” “சாகுந்தலம்” திரைப்படம் எதிர்பார்த்தபடி வெளியாகவேண்டும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
unknown nodeSamantha In Shaakuntalam Trailer Launch [Image Source : Google]
எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இன்னும் இழக்கவில்லை . படத்தை பாருங்கள் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும்” என கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோவும், அவர் கண்கலங்கிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் அவருக்கு நாங்கள் இருக்கிறோம் என ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
unknown node