இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் லியோ படத்திற்கான படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
லியோ
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown nodeBloody Sweet [Image Source: Twitter ]
படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது, படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் டைட்டில் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
லியோ படப்பிடிப்பு காஷ்மீரில்
தற்போது லியோ படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்காக படக்குழு சமீபத்தில் விமானத்தின் மூலம் காஷ்மீர் சென்றார்கள். இதனைஎடுத்து முதற்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் லியோ படத்திற்கான படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
unknown node