வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டாம் உயிர் முக்கியம் – சேரன் அறிவுரை..!!

Director Cheran has given his advice that life is important not to leave the house.

வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டாம் உயிர் முக்கியம் என்று இயக்குனர் சேரன் ட்வீட்டர் பக்கத்தில் அறிவுரை கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள். மேலும் பல சினிமா பிரபலங்கள் , கிரிக்கெட் வீரர்கள் தங்களால் முடிந்த உதவியை இந்தியாவின் மருத்துவ உதவிக்கு கொடுத்து வருகிறார்கள். மேலும் சிலர் அறிவுரை  கூறிவருகின்றார்கள்.

அந்த வகையில் இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” நண்பர்களே.. எல்லா இடங்களிலுமே கொரோனா தொற்றால் பலி  அதிகம் நிகழ்கிறது. தொற்று ஏற்படாமல் தங்களை ஒவ்வொருவரும் பாதுகாத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. எனவே அதிக கவனமுடன் இருங்கள். அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டாம். உயிர் முக்கியம். மற்றவற்றை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.” என்று தனது அறிவுரையை கூறியுள்ளார்.

unknown node