நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வெளியானால் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிவிடுவார். அந்த வகையில், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான விடுதலை படத்தை பார்த்துவிட்டு டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி டிவிட் ஒன்றை செய்து உள்ளார்.
முன்னதாக படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன், சூரி ஆகியோரை நேரில் அழைத்து படம் மிகவும் அருமையாக இருப்பதாக பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
unknown nodeஇதனை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தை பாராட்டியுள்ளார். படம் குறித்து அவர் கூறியுள்ளது ” விடுதலை… இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்! சூரியின் நடிப்பு – பிரமிப்பு. இளையராஜா – இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் – தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என ரஜினி பாராட்டியுள்ளார்.
unknown nodeபாராட்டியதற்கு நன்றி தெரிவித்துள்ள சூரி டுவிட்டரில் “இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.