பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ஈஸ்வரன் பட நடிகை.! அடித்த ‌ஜாக்பாட்டை பாருங்களேன்.!

Actress Nithi Agarwal is next to pair up with Pawan Kalyan.

நடிகை நிதி அகர்வால் அடுத்ததாக பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஈஸ்வரன்.அதே போன்று ஈஸ்வரன் வெளியான நாளில் ஓடிடியில் வெளியான திரைப்படம் தான் பூமி .இதன் மூலம் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிதி அகர்வால்.ஒரே நாளில் தமிழில் அவர் நடித்த இரு படங்களும் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நிதி அகர்வால்.

தற்போது இவருக்கு பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் நடிக்கும் அவரது 27வது படத்தில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.இந்த படத்தினை கிரிஷ் இயக்க இருப்பதாகவும் ஏஎம் ரத்னம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.