திரை தீ பறக்க...கெத்தாக களமிறங்கிய "வாரிசு" விஜய்.! வெறித்தனமான அப்டேட் இதோ...

விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த படத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ரஞ்சிதமே பாடல் மக்களுக்கு

விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த படத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ரஞ்சிதமே பாடல் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் மற்றும் அடுத்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

unknown node

Varisu [Image Source: Twitter]

இதனையடுத்து, விஜய் சினிமாவிற்குள் நடிக்க வந்து வரும் டிசம்பர் 4-ஆம் தேதி 30 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி “வாரிசு” படத்தின் புது அப்டேட் ஒன்று இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வீடியோ வெளியீட்டு அறிவித்திருந்தது.

unknown node

VarisuUpdate At 6 30 [Image Source: Twitter ]

அதன்படி தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், வாரிசு படத்தின் ” தீ தளபதி ” எனும் இரண்டாவது பாடல் டிசம்பர் 4-ஆம் தேதி 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

unknown node

மேலும் இந்த வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ்.இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் ராஷ்மிகா, சங்கீதா கிரிஷ், சரத்குமார், ஷாம் , பிரகாஷ் ராஜ், சம்யுக்தா கார்த்திக், ஜெயசுதா, யோகி பாபு, சம்யுக்தா சண்முகநாதன் ஆகியோர் நடித்துள்ளார்கள். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.