'வாத்தி' படத்தின் இடைவெளியில் 'லியோ ' பட காட்சி..! தயாரிப்பு நிறுவனத்தின் மாஸ்டர் பிளான்.!

தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள "வாத்தி"  திரைப்படத்தில் நடித்து  முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி-17ஆம் தேதி தமிழ்,

தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “வாத்தி”  திரைப்படத்தில் நடித்து  முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி-17ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை தமிழகத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன்  நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

unknown node

Vaathi [Image Source : Twitter]

எனவே, கிட்டத்தட்ட படம் தமிழகத்தில் மட்டும் 500 திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 7 ஸ்க்ரீன் நிறுவனம் தான் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.

unknown node

leo vaathi [Image Source : Twitter]

இதனால் வாத்தி திரைப்படத்துடன் சேர்த்து லியோ படத்தையும் ப்ரோமோஷன் செய்வதற்காக 7 ஸ்க்ரீன் நிறுவனம் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளது. அதன்படி, வாத்தி திரைப்படம் வெளியாகி  திரையரங்குகளில் ஒளிபரப்பாகும் போது அதனுடையஇடைவேளை (Interval)காட்சியில் ‘லியோ’ படத்திற்கான டைட்டில் டீசரை ஒளிபரப்பு செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

unknown node

Bloody Sweet [Image Source: Twitter ]

இதனால், வாத்தி திரைப்படம் பார்க்க செல்லும் அனைவரும் “லியோ” படத்திற்கான டைட்டில் டீசரை திரையரங்குகளில் பார்த்து மகிழலாம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.