தியேட்டர் தெறிக்க போகுது... மீண்டும் களமிறங்கிய லெஜண்ட் சரவணன்..!

Filming for the new movie starring Saravanan Arul, owner of Saravanan Stores, has started today.

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கவுள்ள புதிய படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள்  விளம்பர படங்களில் மட்மே நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவதற்கு ஒரு புதிய படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை நடிகர் அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாகி நடிகை ரித்திகா திவாரி நடிக்கிறார், மேலும் படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழுவதுமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்துவைக்கப்பட்டது. படத்திற்கான ஒரு ரொமான்டிக் பாடல் மட்டும் படமாக்கப்பட்டு முடிந்துள்ள நிலையில், இன்று மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாகவே அதிரடி சண்டைக்காட்சிகளுடன் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது அதற்கான சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

unknown node
தியேட்டர் தெறிக்க போகுது... மீண்டும் களமிறங்கிய லெஜண்ட் சரவணன்..!