தமிழ் சினிமாவில், மிருகம் பாத்தின் மூலம் அறிமுகமான ஆதிக்கும், டார்லிங் படம் மூலம் அறிமுகமான நிக்கி கல்ராணிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தமிழில் யாரையும் அழைக்காமல் தெலுங்கில் முக்கியமானவர்கள் மட்டும் அழைத்து இவர்களது நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றது.
unknown nodeஅதனை தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணி நிச்சயதார்த்தம் முடிந்த நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளபக்கங்களில் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். இப்போது அதிகாரபூர்வமாக நிச்சயம் செய்துகொண்டுள்ளோம். 24.03.2022… இந்த நாள் எங்கள் இருவருக்கும் மிகச் சிறப்பு வாய்ந்தது. எங்கள் இரு வீட்டாரும் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளோம்.” என பதிவிட்டிருந்தார்.
unknown nodeஇவர்களது நிச்சியத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது. இந்த நிலையில், தற்போது நடிகர் ஆதி ட்வீட்டர் பக்கத்தில் நிச்சியத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோவில் இருவரும் சந்தோசமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Love. Happiness. Positivity ♥️♾ @nikkigalrani @camsenthil pic.twitter.com/PzEYRI8sTV
— Aadhi???? (@AadhiOfficial) March 28, 2022
ஆதி தற்போது லிங்குசாமி இயக்கும் “வாரியர்” படத்தில் வில்லனாகவும், ஹன்சிகா, யோகிபாபு, ரோபோ சங்கருடன் “பார்ட்னர்” என்ற நகைச்சுவை படத்திலும் நடிக்கிறார். நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள இடியட் திரைப்படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.