தளபதி விஜய்க்கு வில்லனாகும் கேஜிஎஃப் வில்லன்...!

It is rumored that Ramachandra Raju, who played the villain in Vijay's film thalapthy 65, will play KGF.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக கேஜிஎஃப் படத்தில் நடித்த ராமச்சந்திர ராஜூ நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

விஜய்நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் தற்போது வரை மக்களுக்கு மத்தியில் சிறந்த விமர்சனத்தையும் நல்ல வசூலையும் செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான போட்டோஷுட் பணிகள் தற்போது சன் நெட்வொர்க் அலுவலகத்தில் நேற்று தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக கேஜிஎஃப் படத்தில் நடித்த ராமச்சந்திர ராஜூ நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.