கே ஜி எஃப் 2 திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படம் ஜூலை 16- ஆம் தேதி வெளியாகும் என்று முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கே ஜி எஃப் 2 திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நாளை கே ஜி எஃப் 2 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், நாளை நடிகர் சஞ்சய் தத் பிறந்த நாள் என்பதால் கூறப்படுகிறது.