ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் – எங்க "கருப்பன்" நடந்து போனா!

நடிகர் சூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது காளை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது காளை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூரி தற்பொழுது இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்திலும் நடிக்கவுள்ளார், அடுத்ததாக இயக்குனர், கவிராஜ் இயக்கத்தில் நடிகர் பரத்துடன் ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அனைத்து சினிமா பிரபலங்களும் வீட்டிலே முடங்கி கிடைக்கின்றன, மேலும் நடிகர் சூரி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார், அந்த வகையில் தற்பொழுது தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் வளர்க்கும் காளை மாடு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதற்குமேல் ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா என்று குறிப்பிட்டுள்ளார், இதற்காக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

unknown node
ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் – எங்க "கருப்பன்" நடந்து போனா!