கதறி அழுத கார்த்தி…! காரணம் என்ன தெரியுமா..? ரகசிய தகவலை கூறிய சூர்யா தங்கை .!

Default Image

நடிகர் சூர்யா மற்றும் அவருடைய தம்பி நடிகர் கார்த்தி இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவருடைய தந்தை சிவகுமார் கூட 80″ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் தான். இப்படி இருக்கையில், சிவகுமாரின் மகளும் சூர்யா,கார்த்தி யின் தங்கையுமான பிருந்தா சினிமாவிற்குள் வரவில்லை.

suriya family
suriya family [Image Source : Google ]

பாடல்கள் பாடுவதில் ஆர்வம் காட்டும் இவர் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் படிப்பு, குடும்பம் என்று செட்டில் ஆகிவிட்டார் என்றே கூறலாம். பிருந்தா பாடுவதை அவருடைய யூடியூப் சேனலில் நீங்கள் கேட்டிருக்கலாம். அவ்வளவு அருமையாக பட கூடியவர். ஆனாலும் அவருக்கு படங்களில் படுவதற்கான பெரிய வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.

Brindha Sivakumar
Brindha Sivakumar [Image Source : Google ]

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பிருந்தா தனது இரண்டு அண்ணன்கள் பற்றி பேசியுள்ளார். பேட்டியில் பேசிய பிருந்தா ” எனக்கு திருமணம் நடைபெறும் போது சூர்யா அண்ணன் அப்பா ஸ்தானத்தில் இருந்து அணைத்து வேலைகளையும் பார்த்துக்கொண்டார்.  கார்த்தி அண்ணன் தான் என்னை மறுவீட்டுக்கு அனுப்பி வைக்க வந்தார். அப்போது கார்த்தி அண்ணன் என்னை கட்டி பிடித்துக்கொண்டு பயங்கரமாக அழுதுவிட்டார்.

Brindha Sivakumar karthi
Brindha Sivakumar karthi [Image Source : Google ]

ஏனென்றால், திருமணம் முடிந்தும் உள்ளூரில் தான் இருக்க போகிறறோம். எனவே பெரிதா எனக்கு  எதுவும் கவலை இல்லை. திருமணம் முடிந்த மறுநாள் என்னுடைய வீட்டில் நான் போய் நின்று கொண்டிருந்தேன். அதனை பார்த்த அண்ணன் கார்த்தி அடி போடி அழுதது எல்லாம் வேஸ்ட்-ஆ போச்சு என கூறினார்” என பிருந்தா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்