படப்பிடிப்பு கேரவனை சொந்த வீடு போல் மாற்றிய கங்கனா ரனாவத்.! எவ்வளவு விலைக்கு தெரியுமா..?

Default Image

நடிகை கங்கனா ரனாவத் தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள “சந்திரமுகி 2” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் படத்தில் அவருடைய பட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்க பட்டுவிட்டதாக புகைப்படங்களை வெளியீட்டு தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்.

Kangana Ranaut
Kangana Ranaut [Image Source : Google ]

இந்த நிலையில், நடிகை கங்கனா ரணாவத் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்கு செல்லும்போது எடுத்துச்செல்லும் வேனை கிட்டத்தட்ட ரூ.65 லட்சம் செலவில் சொந்த வீடு போல் மாற்றியுள்ளாராம். இந்த தகவலை அம்பானி குடும்பங்களுக்காக வேலை செய்து வரும் கேதன் ராவல் என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Kangana Ranaut
Kangana Ranaut [Image Source : Google ]

படப்பிடிப்புக்கு சென்றாலும் அங்கும் தனது வீடு போன்ற உணர்வு இருக்கவேண்டும் என்பதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை கங்கனா 65 லட்சம் செலவு செய்து மாற்றி உள்ளாராம். அந்த வேனிலில் ஒரிஜினல் மரத்தில் இருக்கைகள் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

KanganaRanaut
KanganaRanaut [Image Source : Google ]

இது மட்டுமின்றி இன்னும் சில வசதிகளும் கங்கனா ரணாவத்  கேரவனில் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவரை போல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பயன்படுத்தும் கேரவன் ரூ.5 கோடி, ஹ்ரித்திக் ரோஷன் ரூ.3 கோடி  சல்மான் கான் 4 கோடி மதிப்பு உடைய கேரவனையும், பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்