‘ராஜ் கமல் பிலிம்ஸ்’ தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகிறது.
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், தனதுராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார்.
unknown nodekamal haasan sivakarthikeyan movie [Image Source : Twitter]
இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஅதற்கான சிறிய வீடியோ ஒன்றையும், ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வீடியோவில் BLOODandBATTLE என்று தலைப்பு வருகிறது அத்துடன் பெரிய கத்தி ஒன்றும் வருகிறது. எனவே படம் அதிரடியான கேங்ஸ்டர் படமாக இருக்கும் என தெரிகிறது.
unknown nodestr 48 update [Image Source : Twitter]
மேலும், ஏற்கனவே, சிம்புவின் 48-வது திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது. எனவே, நாளை வெளியாகும் அறிவிப்பில் சிம்பு படம் பற்றி தான் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.