காதலர் தினத்தை எளிமையான உணவகத்தில் கொண்டாடிய காஜல்...!

On the eve of Valentine's Day, actress Kajal Agarwal shared photos of herself and her husband eating at a simple restaurant in Pollachi.

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் பொள்ளாச்சியில் இயங்கிவரும்  எளிமையான உணவகத்திற்கு சென்றுசாப்பிட்டுவிட்டு அதற்கான புகைப்படங்களை தனது ட்வீட்டர் வெளியிட்டுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் கவுதம் கிச்லு என்ற தொழிலதிபரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவருடன் பொள்ளாச்சியில் இயங்கிவரும் மிக எளிமையான உணவகமான சாந்தி மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு அந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை வெளியிட்டு அவர் கூறியது ” பொல்லாச்சியில் எனக்கு மிகவும் பிடித்த உணவகம் சாந்தி உணவகம். சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா, எங்களுக்கு மிகுந்த அன்புடன் சேவை செய்கிறார்கள். கடந்த 27 ஆண்டுகளில் இருந்து அவர்களின் உணவு தொடர்ந்து சுவையாக இருப்பதற்கான காரணம் இதுதான். நான் 9 வருடமாக இந்த உணவகத்திற்கு சென்று வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

unknown node
காதலர் தினத்தை எளிமையான உணவகத்தில் கொண்டாடிய காஜல்...!