எனது வாழ்க்கையை உயர்த்திய படம் கைதி – ஜார்ஜ் மரியன்.!

George Marion said on his Twitter page that the prisoner film was a film that elevated his life

ஜார்ஜ் மரியன் கைதி படம் தனது வாழ்க்கையை உயர்த்திய படம் என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகாஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. மிகவும் அருமையான கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பாடல்கள் இல்லாமல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்திகிற்கு மிகவும் பெரும் வரவேற்பை கொடுத்தது. இந்த படம் விஜய் நடித்த பிகில் படத்துடன் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மரியன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” கைதி படத்தின் முதல் தோற்றம் 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்று வெளியிடப்பட்டது. எனது வாழ்க்கையை உயர்த்திய படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி” என்று ட்வீட் செய்துள்ளார்.

unknown node