சசிகுமார் மற்றும் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உடன்பிறப்பே. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார்.
அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை ஜோதிகாவும், அண்ணனாக நடிகர் சசிகுமாரும் நடித்துள்ள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படம் வரும், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக நேரடியாக இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் அமேசான் பிரேமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம் இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு படத்திற்கு “உடன்பிறப்பே” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown node