நடிகை சன்னி லியோன் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொள்ளவிருந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே இன்று வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) மணிப்பூரின் இம்பாலில் பேஷன் ஷோ ஒன்று நடைபெறவிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகை சன்னிலியோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருந்தார். ஆனால், திடீரென இன்று அந்த பேஷன் நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே குண்டு வெடிப்பு ஏற்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
unknown nodeSunnyLeone [Image Source: Twitter ]
இந்த குண்டுவெடிப்பு பேஷன் நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நடந்தது. வெடிகுண்டு வெடிப்பு சாதனம் அல்லது வெடிகுண்டு காரணமாக ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த குண்டு விபத்தில் ஒருவர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeSunnyLeone [Image Source: Twitter ]மேலும் நாளை சன்னிலியோன் பேஷன் நிகழ்ச்சிக்கு வரவிருந்த நிலையில், இன்று குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது நாளை நடைபெற்றிருந்தால் பெரிதாக பேசப்பட்டிருக்கும். மேலும் இதற்கு முன்பு மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.