ஜாலியா ஒரு பயணம்…நடுக்கடலில் அஜித்குமார் -ஷாலினி..! வைரலாகும் புகைப்படங்கள்.!
நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் சுற்றுல்லா சென்றாலோ அல்லது ஏதேனும் விழாக்களுக்கு சென்றாலோ அவருடைய புகைப்படங்களும். அவர் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொள்ளும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகிவிடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அஜித் தனது மனைவி குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
View this post on Instagram
இந்த நிலையில் அஜித் மற்றும் அவருடைய மனைவி ஷாலினி இருவரும் துபாக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அங்கு நடுக்கடலில் கப்பலுக்குள் அமர்ந்து பயணம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இதற்கான புகைப்படங்களை ஷாலினி அஜித்குமார் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில் அஜித் டிசர்ட் அணிந்து கொண்டு மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். ஷாலினி அவருடன் நெருக்கமாக அமர்ந்துகொண்டு ஸ்டில் கொடுத்துள்ளார்.
மேலும் அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு செல்லவுள்ளார். இந்த பயணத்திற்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.