ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு.? கடும் சோகத்தில் ரசிகர்கள்.!

இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். விஜய்

இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சன்யா மல்ஹோத்ரா, யோகி பாபு, பிரியாமணி, பிரியாமணி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

unknown node

Jawan [Image Source : Google ]

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

unknown node

Jawan [Image Source : Google ]

ஏனென்றால், ஜவான் திரைப்படத்தின் இன்னும் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரமோஷன் பணிகள் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாகவே படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.  விரைவில் புது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

Jawan [Image Source : Google ]

ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் ஜனவரி மாதம் திரையரங்குகளில் பதான்  திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், ஜவான் படத்தை பார்க்க ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படவுள்ளதாக பரவும் தகவலால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு.? கடும் சோகத்தில் ரசிகர்கள்.!