தயாரிப்பாளர் போனிகபூரின் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் ஹிந்தி ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தவர் என்றே கூறலாம்.
unknown nodeJanhvi Kapoor White Dress [Image Source: Twitter]
ஜான்வி கபூர் தற்போது ஹிந்தியில், இயக்குனர் மாத்துக்குட்டி சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள மிலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அவருடைய தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் தான் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
unknown nodeJanhvi Kapoor Mili Movie [Image Source: Twitter]
திரில்லர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
unknown nodeJanhviKapoor Selling Popcorn At Theatre [Image Source: Twitter]
இந்த நிலையில், ஜான்வி கபூர் தனது ‘மிலி’ படத்திற்கான பிரமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஆம், டெல்லியில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஜான்வி கபூர் பாப்கான் விற்று ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். அதற்கான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node