1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த "ஜெய் சுல்தான்" வீடியோ பாடல்..!!

The Wa Sultan video song from the movie Sultan has crossed 1 million views on YouTube

சுல்தான் படத்தின் வா சுல்தான் வீடியோ பாடல் யூடியூபில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து.

அடுத்ததாக படத்திற்கான டிரைலரை கடந்த 23 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து தினம் தினம் படத்திற்கான மேக்கிங் வீடியோ, ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு வருகின்றார்கள். இதனை தொடர்ந்து நேற்று இந்த படத்தில் இடம்பெற்ற ஜெய் சுல்தான் வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த பாடல் தற்போது யூடியூபில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

unknown node