கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படத்தின் ஜெய் சுல்தான் என்ற பாடலை தற்போது படக்குழுவினர் வெளியீட்டுள்ளனர்.
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் மேர்வின் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்திலிருந்து கடந்த 1 ஆம் தேதி படக்குழு டீசரை வெளியீட்டனர். அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதல் பாடலான ஜெய் சுல்தான் என்ற பாடலை வெளியீட்டுள்ளனர். இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர், ஜூனியர் நித்யா & கானா குணா ஆகியோர் படியுள்ளார்கள்.
unknown node