எத்தனை படம் செஞ்சோம்னு முக்கியமில்லை.. தரமான ஹிட் தான் முக்கியம்.! ஜெயம் ரவி அசத்தல்.!

ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான பேராண்மை,

ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான பேராண்மை, சந்தோஷ் சுப்ரமணியம், பூலோகம், மிருதன், தனிஒருவன், கோமாளி ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

unknown node

இந்த படங்களை தொடர்ந்து தற்போது  ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் காத்திருக்கிறது.

இதையும் படியுங்களேன்-குத்து பாட்டுக்கு கோடிகளில் சம்பளம் வாங்கிய டாப் 5 நடிகைகள்.! முதலிடத்தில் இந்த நடிகையா..?

unknown node

இதற்கிடையில், இன்று நடிகர் ஜெயம் ரவி தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி, அவர் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சேர்த்து விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது.

unknown node

அந்த விழாவில் பேசிய ஜெயம் ரவி “நான் சினிமாவில் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு என்னுடைய அண்ணன் மோகன் ராஜா தான் காரணம். வெற்றி கொடுத்தாலும் நல்ல படங்களை மட்டும் பண்ண வேண்டும், அதற்காக காத்திருக்க வேண்டும் என என்னுடைய அப்பா சொல்வார். அதனால் தான் நான் இந்த 20 ஆண்டுகளில் 25 படங்கள் மட்டுமே பண்ணியுள்ளேன்.

unknown node

எனக்கு பின் வந்தவர்கள் 40, 45 படங்கள் செய்துவிட்டனர். படங்களில் நடிப்பதில் எண்ணிக்கை முக்கியம் இல்லை. தரம் தான் முக்கியம். என்னுடைய வெற்றிக்கு நல்ல படங்கள் தேர்ந்தெடுத்து நடித்ததுதான் காரணம். அதனால் தான் தோல்வி படங்கள் குறைவு” என அசத்தலாக பேசியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.